Thalaivan.....
தலைவன் .......
ஒரு தலைவன், ஒரு கூட்டத்தை வழி நடத்துபவன்.
தலைவன் என்பவன் யார் என்று அவன் தீர்மானிப்பதை விட அவன் சுற்றுப்புறம் அதை நிர்ணயிக்கும் போது தான் அவன் உண்மையில் தலைவன் ஆகிறான்...
தலைவன் என்பவன் பின்னால் தானாகவே ஒரு கூட்டம் கூடும்.
அவன் செல்லும் வழியில் செல்ல ஏத்துநிற்கும்...
அவனுக்கு விளம்பரம் தேவையில்லை... சுயமாகவே சுற்றிநிற்பவர்களை மட்டும் இன்றி அவர்களது மனங்களையும் வென்றிடுவான்.....
தினம் தினம் வெவ்வேறு தலைவர்களை பற்றி கேள்வியுறுகிறேன்...
என்றாலும் என் மனம் அவர்களை தலைவனாய் ஏற்று கொண்டதே இல்லை...
நான் அர்த்தம் கண்ட நான் வியந்த அந்த தலைவனின் முன்னாள் எனக்கு எவரும் தலைவனாய் தெரியவில்லை...
சிறு வயது முதலே மொழி மீது எனக்கு அளவு கடந்த பிரியம் அதை கற்று கொள்ளவோ அதை கொண்டாடவோ வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட...
ஒரு சிறுமியாய் நான் தலைவனாய் போற்றும் அந்த மனிதனை பற்றியும் அவர், தமிழ் மீதும், தமிழ் மண் மீதும் கொண்ட அளவில்லா பற்று பற்றியும் கேள்வி பட்டிருக்கிறேன்.....
ஒரு நாள் அவரை எங்கோ தூரத்தில் காண வாய்ப்பு கிட்டியது....
வெகு தூரத்தில் ஒரு கூட்டத்தை பார்த்து பேசி கொண்டிருந்தார்.....
வெகு தூரத்தில்.....
இரண்டடி உயரம் கூட இருக்காது எனக்கு...
உயரமாய் நின்ற கூட்டத்தில் உயர பறந்து பார்க்கவும் இயலவில்லை.....
ஆனால் பேசிய வார்த்தைகள் மட்டும் என் மனதில் ஆழமாய் பதிந்தது....
இன்று இதை பதிவிடும் போது கூட அன்று கேட்ட வார்த்தைகள் நினைவில் நிற்கிறது....
சில வருடங்களுக்கு பிறகு அவரை தொலைக்காட்சியில் பார்த்தேன்...
அந்த கம்பிரம்...
தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அந்த பாவனை...
ஒரு துளியும் பயமில்லா அந்த பார்வை...
எதிரிக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த அவரின் வீரம்...
வெவ்வேறு முகங்கள் கொண்ட ஒரு சமூகத்தை அவர் வழிநடத்திய நேர்த்தியான அறிவு...
அழிவில் இருந்த தன் சமூகத்தின் அனைவரையும் தன் பிள்ளைகளாய் அரவணைத்த மனம்....
என்று அனைத்தும் என்னை ஈர்த்தது ...
அன்றே ஆழமாய் அவர் தான் தலைவன் என்று ஏற்றுக்கொண்டேன்....
விவரம் தெரிய தெரிய அவர் மீது நான் கொண்ட மதிப்பும் மரியாதையும் பலமடங்கு அதிகரித்தது ....
அதிகமாக அவரை நேசித்தேன்...
அவருக்கு எந்த கெடுதலும் வரவே கூடாது என்று பிரார்த்தித்தேன் ....
ஓரு சமூகமே ஒருவனை முழுமனதாய் தன் தந்தையாக, சகோதரனாக, தன் மகனாக , தான் போற்றும் கடவுளுக்கு நிகராக ஏற்று கொள்ளும் போது தான் தலைவன் என்பவனின் அர்த்தம் முழுமையாகிறது ....
பெரும் தலைவர்களை பற்றி வெவ்வேறுவிதமான கருத்து வேறுபாடுகள் நிறையவே இருக்கும், ஒரு சமூகம் அவர் சரி என்றும் இன்னொரு சமூகம் தவறென்றும் வாதங்கள் எழுந்த வண்ணமே இருக்கும், என்றாலும் இவரை பற்றி ஒரு தமிழன் தவறாக பேசி கேட்டது மிக அரிது.
தன் லட்சியத்துக்காக தான் வாழ்ந்த அந்த மண்ணின் உரிமைக்காக தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் குடும்பம், பிள்ளைகள், ஏன் தன் உயிரையும் தமிழனுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் அர்ப்பணித்து வீர மரணம் அடைந்த என் தலைவன் என்றும் நான் போற்றுபவனாகவே இருப்பான்.
அவர் செய்த சில விடயங்கள் தவறென்று கூறுபவர்களுக்கு!!!!
எல்லா மனிதனுக்குள்ளும் நிறை குறை இரண்டுமே உள்ளது...
புத்தன் கூட தவறிழைத்தவன் தான்...
ராமன் கூட சீதையை நெருப்பில் எரிய விட்டவன் தான்....
கிருஷ்ணன் கூட சூழ்ச்சி செய்தவன் தான்
தான் போற்றும் சமூகத்தின் நலனுக்காக...

No comments: